பட்டாசு ஆலை வெடிவிபத்து...அண்ணாமலை ட்விட்டர் பதிவு...தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தல்!

பட்டாசு ஆலை வெடிவிபத்து...அண்ணாமலை ட்விட்டர் பதிவு...தமிழ்நாடு அரசுக்கு வலியுறுத்தல்!
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு அரசு பட்டாசு ஆலைகளை உரிய முறையில் கண்காணித்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 

காஞ்சிபுரம் குருவிமலை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து பட்டாசு ஆலையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் வெடி விபத்து தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், காஞ்சிபுரம் குருவிமலை பகுதியில் நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் 9 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்ததாகவும், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

மேலும் காயமடைந்தவர்களுக்கு அரசு சார்பில் தரமான சிகிச்சையளிக்க வேண்டும் என்றும், இனியும் இதுபோன்ற விபத்துகள் நடைபெறாமல் தடுக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பயிற்சியையும் பட்டாசு ஆலைகள் வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசு அவற்றை உரிய முறையில் கண்காணித்து தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com