தென்தமிழகம் தற்போது சாதி பிரச்னையினால் மிகக் கொடூரமாக பாதிக்கப்பட்டு கொண்டிருப்பது மிக கவலை அளிப்பதாக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
தூத்துக்குடி விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சாதனை படைத்துக் கொண்டிருக்கின்ற தென்தமிழகம் தற்போது சாதி பிரச்சனையினால் மிகக் கொடூரமாக பாதிக்கப்பட்டு கொண்டிருப்பது மிக கவலை அளிக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "தச்சநல்லூரில் இரண்டு இளைஞர்களை சாதியத்தை சுட்டி காண்பித்து சிறுநீர் கழிக்கப்பட்டது மிக வேதனையாக இருக்கிறது. தமிழகத்தில் சாதிய வன்முறைகள் அதிகரித்து இருக்கிறதை தான் சொல்ல வேண்டும். தொடர்ந்து, நாங்குநேரி நிகழ்வு, வேங்கை வயலில் குடிநீரில் மலம் கழிப்பு, மனிதர் மீது சிறுநீர் கழிப்பது ஆகியவை கவலை அடிக்கக்கூடியது அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்
ஆனால் நீட் தான் தலையாய பிரச்சனை போன்று அதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள், எனக் குற்றம் சாட்டியுள்ளார்.