"முட்டை மார்க் வாங்கினால் எல்கேஜி-யில் கூட சேர்த்துக்கொள்ள மாட்டார்கள்" தமிழிசை!

Published on
Updated on
1 min read

நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்களுக்கு அவநம்பிக்கையை ஒருபோதும் ஏற்படுத்தாதீர்கள் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை  தெரிவித்துள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் தெலுங்கானா ஆளுநரும் பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட்டுக்குதான் கூறினார்கள் ஆனால் தற்போது அவர்கள் கையெழுத்து இயக்கத்தை நடத்துகிறார்கள் என விமர்சித்துள்ளார்.

மேலும், "நீட்டைப் பொறுத்தவரை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதை எதிர்த்து ஆளும் கட்சியாக இருக்கும் திமுக கையெழுத்து இயக்கம் நடத்துகிறது. அவர்கள் மத்திய அரசில் இருக்கும் பொழுது கூட இது போன்ற முயற்சிகள் எடுக்கவில்லை இது ஒரு கண்துடைப்புதான். நீட் தேர்வு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு அவநம்பிக்கையை ஒருபோதும் ஏற்படுத்தாதீர்கள்" எனவும் கூறியுள்ளார்.

மேலும், "தற்பொழுது அதிகாரிகளின் சோதனையில் மருத்துவ கல்லூரிகள் வைத்திருப்பவர்கள் வீட்டில் இருந்து எவ்வளவு எடுத்திருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். நீட் தேர்வில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம். உதயநிதி ஸ்டாலின் முட்டை காண்பித்து முட்டை மார்க் வாங்கினால் கூட மருத்துவ கல்லூரியில் சேரலாம் என பேசுகிறார். முட்டை மார்க் வாங்கினால் எல்கேஜில் கூட சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்" எனவும் விமர்சித்துள்ளார்.

மேலும், உயர்கல்வியில் மூன்றாவது கவுன்சிலிங்கில் மற்றும் காலியாக இருக்கக் கூடாது என்று இந்த வருடம் மட்டும்தான் கொடுக்கப்பட்டது எனவும், இதை எதுவும் கவனிக்காமல் முட்டையை காண்பது செங்கல் காண்பிப்பது மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்பது தனது தாழ்மையான கருத்து எனவும் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com