விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 அரசு பள்ளிகளை சேர்ந்த 2 ஆயிரத்து 89 மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சா் பொன்முடி தமிழ்நாட்டில் உயர்கல்வியில் தரம் சரியில்லை என்று சிலா் கூறி வருவதாக ஆளுநா் ஆா்.என்.ரவியை சாடினாா். ஆனால் உயர்கல்வியில் தமிழ்நாட்டில் உள்ள தரத்தை போல எந்த மாநிலத்திலும் இல்லை என்பதை நிரூபித்து காட்டியிருப்பதாகவும் தொிவித்தாா்.
அதனை தொடர்ந்து செய்தியாளா்களை சந்தித்து பேசிய அமைச்சாிடம் தமிழகத்தின் கல்வி தரம் சரியில்லை என ஆளுநரின் கருத்து குறித்து கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த பொன்முடி, உயர்கல்வியில் பாடத்திட்டத்தின் தரம் எப்படி இருக்கிறது என மாணவர்களே கூறுவதாகவும், இரு மொழிக்கல்வி கொள்கை மூலமாக தமிழகத்தில் கல்வி அறிவு மிகச்சிறப்பாக வளர்ந்து கொண்டிருப்பதாகவும் தொிவித்தாா்.
மேலும் உலகளவில் கல்வி தரம் உயர்ந்துள்ளதாகவும், கல்வி திட்டத்தில் எந்த குறையும் இல்லை எனவும் கூறினாா்.