”தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” - தேமுதிக இளைஞர் அணி சார்பில் வலியுறுத்தல். 

”தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” - தேமுதிக இளைஞர் அணி சார்பில் வலியுறுத்தல். 
Published on
Updated on
1 min read

மதுபானக்கடைகள் அடைப்பு குறித்து தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தேமுதிக  இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் வலியுறுத்தியுள்ளாா். 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகில் தேமுதிக கட்சியின் சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாராக கேப்டன் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் பங்கேற்று தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள்மத்தியில்சிறப்புரைநிகழ்த்தினார். 

அப்போது பேசிய அவர் திமுக, அதிமுக ஊழல் செய்து கட்சியை வளர்த்து வருகிறார்கள். ஆனால், தேமுதிக கட்சி மட்டும் சொந்த செலவில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்துவருகிறது என்றார். உதயநிதிஸ்டாலின் நான்குமுறை முதல்வராக இருந்தவரின் பேரனாகவும், மேயராக இருந்த தந்தையின் மகனாக வந்தார். ஆனால் தனது தந்தையின் உடல்நலம் குறைவு காரணமாக எனது கனவு துறந்துவிட்டு அரசியலுக்கு
மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக வந்ததாக கூறினார். 

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜயபிரபாகரன் கூறியதாவது:- 

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் முடிவு எடுப்பர் என கூறினார். 

தமிழகத்தில் 500 மதுக்கடைகள் மூடம் நடவடிக்கையை தமிழக அரசு கண்துடைப்புக்காக மட்டுமேதமிழகஅரசுமூடிஉள்ளது. இதனால் கடையடைப்பு குறித்து முழு விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும்",  என கேட்டுக்கொண்டார். 

இந்தியாவில் எதிர்கட்சிகள் பிரதமர் நரேந்திரமோடியை எதிர்த்தாலும்,  பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் ஆதரவு இருப்பதால் இதற்கு எல்லாம் பதில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தான் தெரியும் என்றார்.

மேலும், விஜய் அரசியலில் வருவது குறித்து அவர் தெளிவாக இதுவரை அவர் எந்த இடத்திலும் பேசவில்லை. அதனால் அவர் அரசியலுக்கு வருவது குறித்து யூகத்தின் அடிப்படையில் பேசுவது முறையாக இல்லை. இதனால் லியோ படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவிக்கிறேன் எனக் கூறினார். 

கேப்டன் விஜயகாந்த் உடல்நலம் குறித்து தயவுசெய்து சமூகவலைதளங்களில் அவதூறு பரப்ப வேண்டாம் பூர்ண உடல்நலத்துடன் உள்ளார் என்பதை தெரிவித்துகொள்கிறேன்", எனவும் கூறினார். 

தொடர்ந்து பேசியவர், அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி ஊழல் நடவடிக்கையில் கைது செய்த நிலையில் இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வாரென  தமிழக அரசு அறிவித்திருப்பது தமிழக முதல்வர் ஸ்டாலின் ஊழலுக்கு ஆதரவு தருவது போல் இருப்பதாக விஜயபிரபாகரன் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com