பிரியாவிடையுடன் தனித்தனித் தேரில் எழுந்தருளிய சுவாமி, அம்பாள்...கோலாகலமாக நடைபெற்ற சித்திரை தேரோட்டம்!

பிரியாவிடையுடன் தனித்தனித் தேரில் எழுந்தருளிய சுவாமி, அம்பாள்...கோலாகலமாக நடைபெற்ற சித்திரை தேரோட்டம்!
Published on
Updated on
1 min read

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் சித்திரை திருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் விழாவை ஒட்டி நாள்தோறும் அம்மனும் சுவாமியும்  வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 8ஆம் நாளில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் கடந்த 30-ந் தேதியும், 9ஆம் நாள் நிகழ்வாக மே 1-ந் தேதி இரவு திக் விஜயமும் நடைபெற்று முடிவடைந்த நிலையில், சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளான நேற்று  மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருவிழாவின் 11-ம் நாளான இன்று காலை 7 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. சுவாமி சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும் தனித்தனித் தேரில் பிரியாவிடையுடன் எழுந்தருளிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதில் மாசி வீதிகள் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com