ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் திடீரென கடல் 50 மீட்டருக்கு உள்வாங்கியதால் கடலில் குளித்த பக்தர்கள் மற்றும் மீனவர்கள் அச்சம்.ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரைக்கு நாள்தோறும் வெளிமாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமாக உள்ளது.
மேலும் படிக்க | 2 ஆண்டு திராவிட மாடல் ஆட்சி -முதலமைச்சர் ட்வீட்
இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் வெளி மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து வந்திருந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி வருகின்றனர்.இந்த நிலையில் திடீரென அக்னி தீர்த்த கடற்கரை சுமார் 50 மீட்டர் உள்வாங்கியதை அடுத்து கடலுக்கு அடியில் இருந்த கடல் பாசிகள், புற்கள், பாறைகள் மற்றும் கடலுக்குள் போடப்பட்ட சாமி சிலைகள் அனைத்தும் வெளியே தெரிந்ததோடு திடீரென கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் மற்றும் மீனவர்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
மேலும் படிக்க | ரூ.2.53 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்...! 7 போ் கைது
மேலும் இது குறித்து மத்திய கடல் ஆராய்ச்சியாளரிடம் கேட்டபோது காலநிலை மாற்றம் காரணமாக திடீரென கடல் உள்வாங்கும் சிறிது நேரம் கழித்து இயல்பு நிலைக்கு திரும்பும் என தெரிவித்துள்ளனர்.