செங்கல் திருடன் வந்தால் தேர்தல் வாக்குறுதி என்னாச்சு என பொதுமக்கள் கேட்க வேண்டும் என அண்ணமாலை தேர்தல் பிரசாரத்தில் பேசியுள்ளார்.
திருடிய செங்கல்:
தருமபுரியில் 2009ல் திமுக அரசு சிப்காட் அமைப்பதாக வாக்குறுதி கொடுத்தது என்னவாது என கேள்வி எழுப்பிய அண்ணாமலை உதயநிதி ஸ்டாலின் உங்களிடம் காட்டும் செங்கல் தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை அமைத்து கொடுக்க வைத்திருந்த செங்கல் எனவும் அதில் இருந்து உதயநிதி ஸ்டாலின் திருடி வந்தது எனவும் கூறியுள்ளார்.
சாராயம் இல்லாத..:
முதலமைச்சரை அவர் வீட்டில் உள்ள காவலாளிகள் கூட மதிப்பதில்லை என்று கூறிய அண்ணாமலை நான்கு நாட்களுக்கு முன்னர் 9 கொலைகள் நடைபெற்றுள்ளது எனவும் சாராயம் இல்லாத தமிழ்நாட்டிற்கு சாராயம் கொண்டு வந்தவருக்கு பேனாவை கடலில் தலைகீழாக வைக்கிறார்கள் எனக் கூறியுள்ளார்.
மாற்றாந்தாய் மனம்:
கொங்கு பகுதிக்கு கொரோனா ஊசிகளை தடுத்து மாற்றான் தாய் மனப்பான்மையை கொண்டு ஆட்சி செய்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் எனவும் காங்கிரஸ் தமிழ்நாட்டில் எப்போதோ ஒழிந்து விட்டது எனவும் தெரிவித்த அவர் காமராஜரை எப்போது நீக்கினாரோ அப்போதே தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஒழிந்து விட்டது எனவும் கூறியுள்ளார். மேலும் தற்போது காமராஜர் பெயரை கொண்டு அரசியல் இலாபம் தேடுகிறார்கள் எனவும் அதனடிப்படையிலேயே திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் வேட்பாளராக நிற்கின்றார் எனவும் பேசியுள்ளார்.
8 நாட்களே:
வரும் நாடாளுமன்ற தேர்தலில் 400 உறுப்பினர்கள் வெற்றி பெற்று பாஜக உறுப்பினர்கள் பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்திற்கு செல்வார் எனக் கூறியுள்ளார் அண்ணாமலை. எனவே திமுகவின் நாடகம் இன்னும் 8 நாட்களுக்குதான் எனவும் அதற்கு பிறகு அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் எனவும் கூறியுள்ளார்.