"வரும் 2024-ல்  புதிய இந்தியா உருவாகும்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 "வரும் 2024-ல்  புதிய இந்தியா உருவாகும்" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
Published on
Updated on
1 min read

பெங்களூரில் இருந்து திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "வரும் 2024-ல்  புதிய இந்தியா உருவாகும்" எனத் தொிவித்துள்ளாா்.

பெங்களூரில் நடைபெற்ற இரண்டாவது எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினாா். பின்னா் அவா் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தடைந்தாா். அப்போது அவருக்கு அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.என் நேரு, ஐ.பெரியசாமி, சேகர்பாபு உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனா். 

பின்னர் செய்தியாளா்களை சந்தித்து பேசிய முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், இந்தியாவின் ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டம், மதச்சார்பின்மை, மாநில சுயாட்சி, ஏழை எளிய மக்களுக்கான நலன் மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். தொடா்ந்து பேசிய முதலமைச்சர், வரும் நாடாளுமன்ற தேர்தலில். பாஜகவை வீழ்த்தி, வெற்றி பெற இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு I.N.D.I.A. என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தொிவித்த முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், மும்பையில் நடைபெறவுள்ள அடுத்த கூட்டத்தில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை புதிய இந்தியா உருவாகும் எனவும் அப்போது அவர் நம்பிக்கை தொிவித்துள்ளார். 

அமலாக்கத்துறை சோதனை என்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,  அனைத்தையும் சட்டரீதியாக எதிர்கொள்ள உள்ளதாகவும் குறிப்பிட்டாா்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com