எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டத்தில் கலந்துகொள்ள பெங்களூரு செல்லும் முதலைமைச்சர் ஸ்டாலின்!

எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டத்தில் கலந்துகொள்ள பெங்களூரு செல்லும் முதலைமைச்சர் ஸ்டாலின்!
Published on
Updated on
1 min read

கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டத்தில் பங்கேற்க வரும் 17-ம் தேதி முதலமைச்சர் பெங்களூரு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளன. இதன் முனைப்பில் கடந்த மாதம் 23-ம் தேதி பாட்னாவில் முதன்முறையாக எதிர்க்கட்சிகள் கூட்டம் கூடியது. 

அதில், காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம், கம்யூனிஸ்டுகள் உள்பட 16 கட்சிகள் பங்கேற்றன. அப்போது, தேசிய அளவில் பாஜகவிற்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது. 

இதைத் தொடர்ந்து 2வது கூட்டம் பெங்களூருவில் வரும் 17,18ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும், வந்து கலந்துகொள்ள வேண்டும் என, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில், எதிர்கட்சிகளின் 2வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக வரும் 17ம் தேதி முதலமைச்சர் பெங்களூர் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு முதலைமைச்சர், பெங்களூரு சென்று வந்தால், போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com