கோவையிலிருந்து காஷ்மீர் வரை செல்லும் சிறப்பு சுற்றுலா ஏசி ரயில்களை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியன் ரயில்வே சுற்றுலாப் பயணிகளுக்காக தொடர்ந்து பல்வேறு வகையான புதிய கோடைகால சிறப்பு ரயில்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி இந்தாண்டு பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் கோவையிலிருந்து காஷ்மீர் செல்லும் சிறப்பு சுற்றுலா ஏசி ரயில்களை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிறப்பு ரயில் வருகின்ற மே 11 ஆம் தேதி காஷ்மீருக்கு புறப்படவுள்ளது.
இந்நிலையில் இந்த சிறப்பு சுற்றுலா ரயில் குறித்து பேசிய ரயில்வே அதிகாரிகள், 12 நாட்கள் சிறப்பு சுற்றுலாவாக இந்த ரயில் கோவையிலிருந்து புறப்படுவதாகவும், சுற்றுலா பயணிகள் செல்லும் ஊர்களில் உள்ள தங்கும் விடுதிகளுக்கு செல்லும் போது அன்றைக்கு தேவையான உடமைகளை மட்டும் எடுத்துச் சென்றால் போதும் மீதி உடமைகள் ரயிலிலேயே பாதுகாக்கப்படும் வசதி உள்ளதாகவும் தெரிவித்தனர்.