ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சிறப்பு சட்டம்... ஆதரவாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை...

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சிறப்பு சட்டம்... ஆதரவாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை...
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை திறக்க வேண்டும் என்று ஆலை ஆதரவாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை ஆதரவாளர்கள் இன்று தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர்களை  சந்தித்து பேசுகையில், ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை செயல்பட்ட காலத்திலிருந்து மக்களுக்கு பல நன்மைகளை செய்து வருகிறது. 

2018 போராட்டத்திற்கு  பிறகு ஆலை மூடப்பட்டிருந்த நிலையிலும் சமூக வளர்ச்சிக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகள் மற்றும் சுயதொழில் பயிற்சி போன்ற பல நன்மைகள் பெண்களுக்கு கிடைத்து வந்தது. ஆனால் தற்போது அந்த செயல்பாடுகளும் தடைப்பட்டிருப்நதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். 

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின் வேலையின்றி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள்  வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுக்கு தரும் மரியாதை கூட ஆதரவாளர்களுக்கு கிடைப்பதில்லை. எதிர்ப்பாளர்களை அழைத்து கருத்துக்களை கேட்பது போல் ஆலைக்கு ஆதரவாளர்களான  எங்களது உணர்வுகளுக்கும் மதிப்பளித்து கருத்துக்களை கேட்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின் நாட்டின் தேவை காரணமாக 100சதவீதம் வெளிநாட்டிலிருந்து தாமிரம் இறக்குமதி செய்து வருகிறோம். 

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் பாகிஸ்தானில் தாமிர உற்பத்தி அதிகரித்துள்ளது. இங்குள்ள ஸ்டெர்லைட் எதிர்பாளர்கள் பாகிஸ்தான் நாட்டில் உள்ளவர்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு அந்நியர்களின் கைக்கூலியாக செயல்படுகின்றனர். ஸ்டெர்லைட் மூடப்பட்ட பிறகு தூத்துக்குடியின் வளர்ச்சியே பின்தங்கி விட்டது. இந்த நிலையில் ஆலையை நிரந்தர மூட சிறப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தி எதிர்ப்பாளர்கள் குழு ஆட்சியில் உள்ளவர்களை சந்தித்து வருகின்றனர். ஆனால் தூத்துக்குடி மக்களின் கருத்தாக நான் சொல்ல வருவது, 

பொதுமக்கள் விருப்பத்துக்கு செவிசாய்த்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். என்றனர். கூட்டத்தில் ஒப்பந்ததாரர் சங்கம் சார்பில் தியாகராஜன், வழக்கறிஞர் அணி சார்பில் மணிகண்ட ராஜா, ஜெயகனி (தாயகம் டிரஸ்ட்) உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com