சென்னை: பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது போக்குவரத்துக்கு கழகம்.
தமிழகத்தில் வருகின்ற 12ம் தேதியில் பள்ளிகள் அணைத்தும் திறக்கவுள்ளன. பள்ளிகள் திறப்பு ஏற்கனவே 2 முறை தள்ளிவைக்கப்பட்ட நிலையில், வருகின்ற 12ல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையொட்டி, மக்கள் ஊர் திரும்புவதற்கு ஏற்ற வகையில், தமிழ் நாடு முழுவதும் கூடுதலாக 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. வார இறுதி நாட்களான 9-ம் தேதி முதல் 11 தேதி வரை 3 நாட்கள் விடுமுறை என்பதாலும், சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளில் இருந்து சென்னைக்கு 650 பேருந்துகள் மற்றும் மற்ற நகரங்களுக்கு 850 பேருந்துகள் என கூடுதலாக ஆயிரத்து 1500 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது போக்குவரத்துக் கழகம்.
இதையும் படிக்க: சில்லி சிக்கன் தர மறுத்ததால், கடை ஊழியருக்கு நேர்ந்த விபரீதம்!