திராவிட முன்னேற்ற கழகம் இனி ஒரு கட்சியாக தமிழ்நாட்டில் இருக்காது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து, மாநிலத் தலைவர்கள் முடிவு செய்ய முடியாது எனவும், மத்திய தலைவர்கள் தான் அது குறித்து முடிவு செய்வார்கள் என்றார். தொடர்ந்து பேசிய அவர், இப்போது நடந்து வரும் திமுகவின் ஆட்சி கேங்ஸ்டர் என்று குறிப்பிடும் அளவில் உள்ளதாகவும் விமர்சித்தார்.
அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்று கூப்பிடுவோம், ஆனா அதுவரை அத்தை என்று கூப்பிடுகிறோம் என அதிமுக பாஜக கூட்டணி பிரச்சனை குறித்து தமாஷாக பேசினார் பாஜக தேசிய மூத்த தலைவர் ஹெச் ராஜா. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் கடந்த இரண்டு நாட்களாக திரு. அண்ணாமலை பற்றியோ மற்றும் மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பற்றியோ ராஜினாமா என்று கூறியதோ அனைத்துமே பத்திரிகையாளர்களை சந்தித்து பேசாத விஷயங்கள் அவை கசிந்த வார்த்தைகளை தவிர அவர்கள் முறையாக கூறியது அல்ல என தெரிவித்தார்.
எனவே இதை பெரிதும் பொருட்படுத்த வேண்டாம் எனவும் கூட்டணி பற்றியோ வேட்பாளர்கள் பற்றியோ மாநிலத் தலைவர்கள் முடிவு செய்ய முடியாது எனவும் கூறினார். மேலும் நாங்கள் சொன்னதே அறிவித்தாலும் சரி, அவர்கள் சொன்னதே சரி, கூட்டணி குறித்து வேட்பாளர்கள் குறித்து மத்திய பாராளுமன்றம் முடிவு தான் இறுதியானது எனவும் தெரிவித்தார். பாஜகவின் ஆதரவாளர்களும் சரி தொண்டர்களும் சரி முழுமையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் எனவும் அதற்கு முன்னதாக ஏதும் கட்டுக்கதைகளை பரப்ப வேண்டாம் எனவும் பேசினார்.
இதையும் படிக்க: எங்குமே தமிழ் இல்லை என்பது தான் கசப்பான உண்மை...!!!