தொழில்நுட்பக் கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு? ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் கருத்து..

தொழில்நுட்பக் கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கையை ஊக்குவிக்க தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பக் கல்லூரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு?   ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் கருத்து..
Published on
Updated on
1 min read
பொறியியல், கால்நடை, வேளாண்மை, மீன்வளம் உள்ளிட்ட தொழிற்படிப்புகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் குறைந்துள்ளது. இதற்குரிய காரணங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் குழு ஒன்றை நியமித்திருந்தது. இதன் முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தில் நடைபெற்றது. இதில் தொழில்நுட்பக் கல்வி சார்ந்த துறை இயக்குநர்கள் மற்றும் பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன், அரசு பள்ளி மாணவர்களில் 2 முதல் 4 சதவீதம் பேர் மட்டும் தொழில்நுட்ப கல்வியில் சேர்வதாகவும், இதனை மாற்றி அரசு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தனி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக முடிவெடுக்கவே ஆலோசனை நடத்தியதாகவும் தெரிவித்தார். 
logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com