செவிலியர்களுக்கு மாதம் 80ஆயிரம் சம்பளம்...வழியனுப்பி வைத்தார் அமைச்சர் செஞ்சி மஸ்தான்!

செவிலியர்களுக்கு மாதம் 80ஆயிரம் சம்பளம்...வழியனுப்பி வைத்தார் அமைச்சர் செஞ்சி மஸ்தான்!
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு அரசு சார்பாக அயல்நாட்டில் பணிபுரிய செல்லும்  6 பெண் செவிலியர்களை சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுவாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழியனுப்பி வைத்தார். 

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், 1978ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு நிறுவனமாக தொடங்கப்பட்டு வெளிநாட்டு வேலை தேடுபவர்களை வெளிநாடுகளில் பணியமர்த்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனம் தொடங்கப்பட்ட 1978ம் ஆண்டு முதல் இதுவரை சவூதி அரேபியா, குவைத், ஓமன், கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பதஹ்ரைன் ஆகிய நாடுகளில் இது நாள் வரை 10,821 நபர்களை வெளிநாட்டு வேலைகளில் பணியமர்த்தியுள்ளது.

இந்நிலையில் அயல்நாட்டில் பணிபுரிவதற்காக பெண் செவிலியர்கள் 6 பேரை அமைச்சர் செந்தில் மஸ்தான் இன்று சென்னை விமான நிலையத்தில் வழி அனுப்பி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம்  பேசிய அமைச்சர், இந்த செவிலியர்களுக்கு மாதம் 80 ஆயிரம் ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு சார்பில் செல்வதால் செவிலியர்களும் அவர்களுடைய  பெற்றோர்களும் பாதுகாப்பாக உணர்வதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய செவிலியர் ஒருவர், அரசு சார்பில் செல்வதால் தங்களுக்கு எந்த பயமும் இல்லை என்று கூறினார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com