தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி முருகானந்தம் பொறுப்பேற்றார்.

தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி முருகானந்தம் பொறுப்பேற்றார்.
Published on
Updated on
1 min read

49-வது தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதையடுத்து புதிய தலைமைச் செயலாளராக முதலமைச்சரின் தனிச் செயலாளராக இருந்த முருகானந்தம் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.

சென்னையைச் சேர்ந்த முருகானந்தம் 1991 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பணியில் சேர்ந்து பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். 2001 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை கோவை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்த இவர், ஊரக வளர்ச்சித் துறையின் இணைச் செயலாளர், டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையர் போன்ற பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

நிதித் துறை செயலாளராகவும் திறம்பட பணியாற்றியுள்ள முருகானந்தம் கடந்த அதிமுக ஆட்சியில் தொழில்துறை முதன்மைச் செயலாளராக பதவி வகித்தார். இந்நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் அறையில் 50-வது தலைமைச் செயலாளராக கோப்பில் கையெழுத்திட்டு பணிகளை தொடங்கினார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com