சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பல கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் சென்னை தரமணியில் உள்ள ஐடி நிறுவனத்திலும், காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையிலும் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து இன்றும் இரண்டாவது நாளாக தரமணியில் உள்ள பிளக்ட்ரானிக்ஸ் டெக்னாலஜி இந்தியா நிறுவனத்தில், 8 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நிறுவனம் செயல்படும் மூன்று தளங்களிலும் பணியாளர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் சோதனை நடைபெறுகிறது.
இதேபோல் சுங்குவார்சத்திரத்தில் உள்ள செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையிலும் சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் 10 பேர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் மீது பண மோசடி புகார்!!!