கூடுதல் விலைக்கு மது விற்பனை; மதுப்பிாியா்கள் வாக்குவாதம்..!

கூடுதல் விலைக்கு மது விற்பனை;  மதுப்பிாியா்கள் வாக்குவாதம்..!
Published on
Updated on
1 min read

குடியாத்ததில்  டாஸ்மாக் மது பானகடையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை மது பிரியர் கடை சேல்ஸ்மேனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, அரசு நிர்ணயத்த விலையை விட கூடுதலாக ரூபாய் 10 வாங்குவதாக மதுப்பிரியர் குற்றம்சாட்டியுள்ளார். 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே தமிழக அரசின் டாஸ்மாக் உயர்ரக மதுபான கடை (கடை எண்:11037) இயங்கி வருகிறது. இந்த மதுபான கடையில் நாள்தோறும் கூலித் தொழிலாளிகள் இளைஞர்கள் முதியவர்கள் உள்ளிட்ட நபர்கள் தினந்தோறும் மதுவை வாங்கி அருந்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று மதுப்பிரியர் ஒருவர் 6 பீர் பாட்டில்கள் வாங்கியதாக கூறப்படுகிறது. அப்போது கடையில் இருந்த சேல்ஸ்மேன் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ஒரு பாட்டில் மீது பத்து ரூபாய் வீதம் என 6 பாட்டில் மீது 60 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்து உள்ளனர். 

இந்நிலையில் அதே மதுபான கடையில் மது பிரியர் மீண்டும் இரண்டு பீர் பாட்டில் வாங்கும் போது கூடுதலாக 20ரூபாய் கேட்டுள்ளனர். அப்போது, அந்த மதுப்பிரியர் 160 ரூபாய் விலை கொண்ட பீர்  பாட்டிலுக்கு கூடுதலாக ரூ. 10 சேர்த்து 170 ரூபாய்கு விற்பனை செய்யபட்டு வருவதாகவும் மதுக்கடை சேல்ஸ்மேனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் குடியாத்தம் பகுதியில் உள்ள மதுக்கடைகளில் விற்பனை செய்யபடும் குவாட்டர் மற்றும் பீர் பாட்டில்கள் மீது கூடுதல் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து வருவதாகவும், டாஸ்மாக் துறை சேர்ந்த அதிகாரிகளுக்கு மாமுல் வழங்குவதாகவும் யாரிடம் சென்று புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என கூறுவதாக மதுப்பிரியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

" தினந்தோறும் கூலி வேலை செய்து உடல் வலிக்காக குடிக்க வரும் எங்களிடம் கூடுதல் விலை வைத்து கொள்ளை அடிப்பது எந்த விதத்தில் நியாயம்..?" , என மதுப்பிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com