சென்னை மாதவரத்தில் லாரி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, புளியந்தோப்பு போக்குவரத்து உதவி ஆணையர் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
ஓட்டுநர்கள் சாலை விதிகளை கடைபிடித்து விபத்துக்களை குறைக்க சென்னை மாதவரம் அருகே விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஓட்டுநர்கள் தங்கள் கடமையை உணர்ந்து குடும்பத்தின் சூழ்நிலை கருதியும் தன்னை நம்பி குடும்பம் உள்ளது என அறிவுறுத்தி குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது எனவும் வாகனத்திற்குரிய ஆவணங்கள் ஓட்டுநர் உரிமம் ஆகியவைகளை சரி பார்ப்பது போல் வாகனத்தையும் சரி பார்த்து சாலை விதிகளை மதித்து அரசு அதிகாரிகளின் கட்டளைக்கு பணிந்து வாகனத்தை இயக்க வேண்டும் எனவும் விபத்து இல்லாமல் கவனத்துடன் ஓட்ட அறிவுறுத்தப்பட்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவாங்கரை பகுதியை சேர்ந்த செல்வி என்ற துப்புரவு தொழிலாளியான பெண் தனது தாயாரை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பின்னால் வந்த லாரி இடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பற்றி அந்த குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் போக்குவரத்து போலீசார் அந்த குடும்பத்தில் உள்ள நபர்களை அழைத்து அவர்களுக்கு பண உதவி செய்துள்ளனர். கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மாதவரம் தனியார் மருத்துவமனையின் மருத்துவர்கள் விபத்தில் சிக்கிய நபரை மயக்கம் அடைந்த நிலையில் இருக்கும் போது அவரை எப்படி முதலுதவி செய்து காப்பாற்ற வேண்டும் என செய்முறையாக செய்து காண்பித்துள்ளனர்.
இதில் லாரி ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க || ஹேக்கிங் மற்றும் இணைய குற்றங்களில் AI பயன்படுத்தப்படுகிறதா?