அதிகரிக்கும் தற்கொலைகள்....!! மனநலம் குறித்து சில தகவல்கள்...

அதிகரிக்கும் தற்கொலைகள்....!!  மனநலம் குறித்து சில தகவல்கள்...
Published on
Updated on
1 min read

மனநலம் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ஆம் தேதி உலக மனநல தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

கருப்பொருள்:

 உலக மனநல கூட்டமைப்பால் இந்த ஆண்டுக்கான கருப்பொருள் "சமநிலையற்ற உலகின் மனநலம்" என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மனநல சேவைகள்:

குறைந்த அல்லது நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள 75 முதல் 95 விழுக்காட்டினர மன நலம் தொடர்பான சேவைகளை அணுக முடிவதில்லை என உலக மனநல கூட்டமைப்பு தெரிவிக்கிறது.  மனநலம் சார்ந்த பிரச்சினைகள் வராமல் தடுப்பதற்கு ஆரோக்கியமான உடற்பயிற்சியும், தனிமை இல்லாத நட்பு வட்டாரம் அவசியம் என்கிறது மருத்துவ உலகம். 

அதிகரிக்கும் தற்கொலைகள்:

குறிப்பாக 15 முதல் 25 வயது உட்பட் வயதுடையினரே ஒவ்வொரு வருடமும் தற்கொலை எண்ணிக்கைகள் அதிகரித்து வருவதாக மருத்துவ ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.  இதற்கு காரணம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உரிய சிகிச்சைகள் அனைத்து மருத்துவமனைகளிலும் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு மேலோங்கி வருகிறது.

மனநலம் நோயாளிகளுக்கு என தேவையான மருத்துவ ஆலோசனைகள் உடனுக்குடன் ஒருவருக்கு கிடைக்கப்பெற்றால், இந்த இதுபோன்ற மனநலம் பாதிப்பிலிருந்து ஒருவர் உடனடியாக மீள முடியும் என்கின்றது மருத்துவ உலகம். 

மனநலம் என்றால்...:

மனநலம் என்பது ஒரு ஆணோ, பெண்ணோ தன்னுடைய திறன் என்ன என உணர்வது அன்றாட வாழ்வில் ஏற்படும் சராசரி மன அழுத்தங்களை சமாளிப்பதாகும். ஒருவர்  ஆக்கபூர்வமாகவும், பயனுள்ள வகையிலும், வேலை செய்து தனக்கும் சமூகத்துக்கும் பங்களிப்பது உடலியல் வளர்ச்சியில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பதே ஆகும். எனவே மனநல சிகிச்சை ஒருவருக்கு இது போன்ற நேரத்தில் கிடைக்க வேண்டும்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com