முல்லைப் பெரியாறு அணையில் தவறி விழுந்த யானையை பொதுப்பணி துறையினர் துரிதமாக மீட்டனர். தேனி மாவட்டம் தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையின் வரத்து வாய்க்காலை கடக்க முயன்ற யானை ஷட்டர் பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரில் சிக்கி உயிருக்கு போராடியது. இந்நிலையில் தமிழக பொதுப்பணி துறையினர் வழக்கம்போல் அணைப்பகுதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட போது யானை ஒன்று உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கேரள வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தண்ணீர் திறக்கும் அளவு குறைக்கப்பட்டதால் யானை எதிர்நீச்சல் அடித்து போராடி கரையேறி அடர்ந்த வனப் பகுதிக்குள் சென்றது.