கொரோனா பரிசோதனைக்கு மிக விரைவில் தளர்வு...அமைச்சர் சொன்ன நீயூஸ்!!

கொரோனா பரிசோதனைக்கு மிக விரைவில் தளர்வு...அமைச்சர் சொன்ன நீயூஸ்!!
Published on
Updated on
1 min read

தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் கட்டாய கொரோனா பரிசோதனைக்கு மிக விரைவில் தளர்வு அளிக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கட்டாயமாக்கப்பட்ட கொரோனா பரிசோதனை:

உலக நாடுகளையே புரட்டிபோட்ட கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்ததிலிருந்து எல்லா மருத்துவமனைகளிலும் உடல்நிலை குறைவுடன் செல்லும் நோயாளிகளுக்கு முதலில் எடுப்பது கொரோனா பரிசோதனை தான். அதற்கு பிறகு தான் சிகிச்சையே அளிக்கப்படும். ஆனால், தற்போது இந்திய அளவில் கொரோனா பாதிப்பின் அளவு மிக குறைந்த அளவிலே உள்ளதால், கொரோனா பரிசோதனை என்பது குறைந்துள்ளது. இருப்பினும் தனியார் மருத்துவமனைகளில் இன்றளவும் கொரோனா பரிசோதனையானது கட்டாயமாக உள்ளது.

மிக விரைவில் தளர்வு அளிக்கப்படும்:

இந்நிலையில் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட ஐந்து விளக்கு பகுதியில் மாபெரும் மருத்துவ முகாம் மற்றும் ரத்த தான முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்வதேச விமான நிலையங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதுபோல், தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் கட்டாய கொரோனா பரிசோதனைக்கு மிக விரைவில் தளர்வு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com