"கேஸ் சிலிண்டர் வெடித்ததே இரயில் விபத்துக்கு காரணம்" ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விளக்கம்!

"கேஸ் சிலிண்டர் வெடித்ததே இரயில் விபத்துக்கு காரணம்" ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விளக்கம்!
Published on
Updated on
1 min read

மதுரை ரயில் பெட்டி தீ விபத்திற்கு கேஸ் சிலிண்டர் வெடிப்பு தான் பிரதான காரணம் என்பது தெரியவந்துள்ளது என இரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி பேட்டிளித்துள்ளார். 

மதுரை ரயில் பெட்டி தீ விபத்து தொடர்பாக தென்சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினார். மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த இரண்டாம் நாள் விசாரணையில் ரயில்வே நிலைய அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் தீயணைப்புத் துணைநர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சவுத்ரி, இதுவரை 20 நபர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் ஏன் முறையாக பரிசோதனை செய்யவில்லை? என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். 

இரயிலில் வந்த சுற்றுலா பயணிகள் நாகர்கோவிலில் காலியான சிலிண்டரை மீண்டும் நிரப்பி உள்ளதாக தெரிவித்த அவர், சிலிண்டர் வெடிப்பு தான் விபத்திற்கான பிரதான காரணம் என தெரியவந்துள்ளதாகவும், கழிவறை அருகே வைக்கப்பட்டிருந்த போது சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு, அதனால் தீ விபத்து ஏற்பட்டு, சிலிண்டர் வெடித்துள்ளது என தெரிவித்துள்ளார். 

மேலும், இதுத் தொடர்பாக லக்னோவில் இருந்தும் ரயில்வே அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளார். 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com