விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான நெறிமுறைகள்... மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு!!

Published on
Updated on
1 min read

விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தப்பட்டு ஆறு, ஏரி, கடல் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் சிலைகளை கரைத்து வருகின்றனர். இந்நிலையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் இயற்கையான, எளிதில் மக்கக்கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்கள் கொண்டு தாயார் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக களிமண், காகிதக்கூழ், இயற்கை வண்ணங்கள் போன்றவற்றைக் கொண்டு செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் எனவும், சிலைகள் கரைக்கப்படுவதற்கு முன்பு சிலைகளில் அலங்கரிக்கப்பட்ட துணிகள், பூமாலைகள், அலங்கார தோரனங்கள், இலைகள், செயற்கை ஆபரணங்கள் போன்றவை அகற்றப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சிலைகள் பாதுகாப்பான முறையில் குறிப்பிடப்பட்ட இடத்தில் மட்டுமே கரைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com