"தமிழ்நாடு ஆளுநர் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார்" பொன்முடி!

"தமிழ்நாடு ஆளுநர் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார்" பொன்முடி!
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு ஆளுநர் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுவதை மக்கள் நன்கு உணர்ந்துள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

விழுப்புரம் தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பாக நீட் தேர்வுக்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஆன க.பொன்முடி கலந்து கொண்டு பொதுமக்களிடம் நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து பெரும் நிகழ்ச்சியை விழுப்புரம் நகரக் கழக அலுவலகத்தில் தொடக்கி வைத்தார். 

அதன் பின்னர் போக்குவரத்து தொழிலாளர்கள் இந்த வருடம் முழு போனசை வழங்குவதற்கு தொழிற்சங்க நிர்வாகிகள் உயர்கல்வித்துறை அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நேரில் சந்தித்து நன்றியை தெரிவித்துக் கொண்டனர். 

அதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "தமிழகத்தில் மக்களின் நலனுக்காக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட 19 முக்கிய தீர்மானங்கள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இதுவரை ஆளுநர் கையெழுத்திடாமல் இருப்பது வேதனைக்குரியதாகும். மேலும் தமிழக ஆளுநர் ஒன்றிய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதையும் ஆளுநர் மாளிகை பாஜகவின் அலுவலக செயல்படுவதையும் தமிழக முதல்வர் தெளிவாக எடுத்துக் கூறி வருகிறார். இதனை தமிழக மக்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர். இது போன்ற முக்கிய காரணங்களுக்காக தமிழக முதல்வர் ஆளுநர் மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்" என கூறியுள்ளார்.

மேலும், "மொழிப்போர் சுதந்திரப் போராட்ட தியாகி சங்கரையாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் இதுவரை ஒப்புக்கொள்ளாமல் இருப்பது சுதந்திரப் போராட்ட வீரர்களை அவமதிப்பதற்கு சமமாகும். எனவே 2 தேதி நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் சுதந்திரப் போராட்ட தியாகி சங்கர் ஐயாவிற்கு  கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com