கோவை மாவட்ட கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி குளத்தை பார்வையிட வந்த பொள்ளாச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் இன்று காலை சென்றார்.இதனிடையே பொள்ளாச்சி ஜெயராமன் ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் முற்றுகையிட்டனர்.
இந்த சூழலில், கூட்டத்தில் இருந்த திமுக தொண்டர்களில் ஒருவர் பொள்ளாச்சி ஜெயராமன் மீது செருப்பை எடுத்து வீசினார்.இதனால் இருதரப்புக்கும் இடையே பதட்டமான சூழலில் நிலவியது. இந்த சூழலில், கூட்டத்தில் சிக்கியிருந்த பொள்ளாச்சி ஜெயராமனை அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.இரு கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலை கண்டு பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரபை ஏற்படுத்தியுள்ளது.