பா.ம.க. மத்திய அரசு என்றுதான் அழைக்கும்.. அன்புமணி ராமதாஸ் பதில்...

ஒன்றிய அரசு என்று அழைப்பதால் எந்தப்பயனும் இல்லை. பாமக மத்திய அரசு என்றுதான் அழைக்கும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.க. மத்திய அரசு என்றுதான் அழைக்கும்..  அன்புமணி ராமதாஸ் பதில்...
Published on
Updated on
1 min read
பாமக கடந்த 19 ஆண்டுகளாக நிழல் நிதிநிலை அறிக்கைனையும், 13 ஆண்டுகளாக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றது.
அதன்படி 2021-2022ஆம் ஆண்டிற்கான  வேளாண் நிழல் நிதி அறிக்கையினை ஜூன் 27ந் தேதி அன்று தாக்கல் செய்தார். ஒவ்வொரு ஆண்டும் வேளாண் நிழல் அறிக்கை ஒரு முக்கிய நோக்கத்தை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்படும். இந்த ஆண்டு வேளாண்மை மற்றும் வேளாண் கல்வி கட்டமைப்பு மேம்பாட்டு சிறப்பு ஆண்டாக அறிவித்து வேளாண் நிழல்நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஏராளமான புதியத்திட்டங்களை அறிவித்தார்.  அனைத்து மாவட்டங்களிலும் உணவுப் பதனத் தொழிற்சாலைகள், வேளாண் கல்வி - 3 புதிய பல்கலைக் கழகங்கள், திண்டிவனத்தில் வேளாண் கல்லூரி, உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று (ஜூன்.5) பொது நிழல் நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்துள்ளார். எப்பொழுதும் போல பெண் பத்திரிகையாளர் மூலம் 19ஆவது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. பெண் பத்திரிகையாளர் ஷெர்லி வெளியிட, அதனை பாமக கட்சியின் பொருளாளர் திலகபாமா பெற்றுக் கொண்டார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் காணொலி மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
20212-2022  ஆண்டில் தமிழ்நாட்டில் வருவாய் வரவுகள் 4,98 585 கோடியாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் 5,000 ரூபாய், ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் 5,000 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15 முதல் முழுமையான நடைமுறைப்படுத்தப்படும் என்றும் நிழல் நிதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் முடிவில், தமிழக அரசு ஒன்றிய அரசு என்று அழைப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, பெயர் மாற்றி அழைப்பதால் எந்த பயனும் இல்லை, பாட்டாளி மக்கள் கட்சி மத்திய அரசு என்றுதான் அழைக்கும் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார்.
logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com