பழவேற்காட்டில் உள்ள பழவேற்காடு எரியும், வங்காள விரிகுடா கடலும் இணையும் முகத்துவாரம் அடிக்கடி அடைபட்டு தங்களது வாழ்வாதாரம் பாதிப்பதால், நிரந்தர முகத்துவாரம் ஏற்படுத்தி தர வேண்டும் என மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து 27கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிரந்திர முகத்துவாரம் அமைக்க தமிழக அரசு திட்டம் தயாரித்து மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது.
இந்நிலையில் இந்த திட்டத்திற்கு தடையில்லா சான்று வழங்குவது குறித்து மத்திய கடல்சார் ஆராய்ச்சி மைய தலைவர் ரமணமூர்த்தி தலைமையிலான மத்திய குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது. அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் ஆகியோர் பழவேற்காடு ஏரியில் மத்திய குழுவினருடன் படகில் சென்று ஆய்வு செய்தனர்.