சவப்பெட்டியுடன் ஒப்பிடப்பட்ட நாடாளுமன்றம்: வெடிக்கும் புதிய சர்ச்சை!

சவப்பெட்டியுடன் ஒப்பிடப்பட்ட நாடாளுமன்றம்: வெடிக்கும் புதிய சர்ச்சை!
Published on
Updated on
1 min read

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை சவப்பெட்டியுடன் ஒப்பிட்டு ஆர்.ஜே.டி கட்சி ட்வீட் செய்ததற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இந்திய நாடாளுமன்றத்திற்கு புதிதாக கட்டப்பட்ட 64,500 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட புதிய கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்துள்ளார். நாடாளுமன்ற புதிய கட்டடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்காததைக் கண்டித்து, காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணித்துள்ளன. மேலும் சாவர்க்கரின் பிறந்த நாளில் புதிய நாடாளுமன்றத்தை திறக்கவும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இந்நிலையில் சவப்பெட்டியுடன் நாடாளுமன்றக் கட்டித்தை ஒப்பிட்டு ஆர்.ஜே.டி ட்வீட் செய்திருந்தது. இந்த ட்வீட் தொடர்பாக தேசத் துரோக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி வலியுறுத்தியுள்ளார். மேலும் பூஜ்ஜியத்துடன் நாடாளுமன்றத்தை ஒப்பிடுவது கண்டிக்கத்தக்கது எனவும் பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஜனநாயகம் புதைக்கப்படுவதையே ட்வீட் வலியுறுத்துகிறது என ஆர்ஜேடி மூத்த தலைவர் சக்திசிங் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com