தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை 10 நாள்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தத் திருவிழா நாள்களில் உலக நன்மை, உலக சமாதானம், மாணவ மாணவிகள் கல்விமேன்மை, வியாபாரிகள், மீனவர்கள், பனைத்தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்குமான விசேஷ திருப்பலிகள் மற்றும் நற்கருணை பவனி நடைபெறும். திருவிழாவின் 10-ம் நாள் விழாவில் நகர வீதிகளில் பனிமய அன்னையின் திருவுருவ தேர்ப்பவனி நடைபெறும். இங்கு கிறிஸ்துவர்களுக்கு அடுத்தபடியாக இந்துக்களும், முஸ்லீம் மக்களும் பிராத்தனைக் கூட்டங்களில் கலந்துகொண்டு, தங்கள் பிராத்தனை நிறைவேற மெழுகுவத்தி ஏந்திஅன்னையை வழிபடுவது கூடுதல் சிறப்பாகும்.