சென்னை உயர்நீதிமன்றம் நிராகரிப்பு
ஓ பி எஸ் தரப்பு மேல்முறையீடு செய்தால் கட்சி தலைவர் மற்றும் மூத்த வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். - இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை பேட்டியளித்தார். அதில் அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்துவிட்டது - இ பி எஸ் தரப்பு வழக்கறிஞர்கள்
இபிஎஸ் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும்
இதன் மூலமாக அதிமுக பொதுக்குழு செல்லும் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் இபிஎஸ் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும். அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள்
பாலமுருகன், இன்பதுரை ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, பேசிய இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பாலமுருகன்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான நடைமுறைகளை நிறுத்த கோரி ஓ பன்னீர்செல்வம் மனோஜ் பாண்டியன் ஜேசிடி பிரபாகர் வைத்தியலிங்கம் ஆகியோர் தொடுத்த மனுக்களை இன்று உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது, இதன் மூலம் நிரந்தர பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது அறிவிக்கப்படும்.
ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு அனைத்து மனுகளையும் நிராகரித்துள்ளார் என்று பாலமுருகன் கூறினார். அதோடு ஓபிஎஸ் தரப்பு மீண்டும் மீண்டும் நீதிமன்றத்தை நாடி அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து , பேசிய இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை
அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்துவிட்டது . இதன் மூலமாக அதிமுக பொதுக்குழு செல்லும் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் இபிஎஸ் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும், என்று இன்பதுரை கூறினார். அதோடு இபிஎஸ் பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான அறிவிப்பு விரைவில் முறைப்படி அறிவிக்கப்படும் என்று இன்பதுரை தெரிவித்தார்.
மேலும் படிக்க | போராட்டத்தில் இறங்கிய தற்காலிக துப்புரவு பணியாளர்கள்
ஜூலை 11 இல் நடைபெற்ற பொதுக்குழு சட்டபடியானது என்று உச்ச நீதிமன்றமும் , உயர் நீதிமன்றமும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, ஓ பி எஸ் தரப்பில் மேல் முறையீடு செய்தால் மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து மூத்த வழக்கறிஞர்கள் கட்சித் தலைவர் ஆகியோருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.