மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில், தமிழக அரசு ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி மறுத்துள்ள நிலையில் கொல்லைப்புற வழியாக ஹைட்ரோகார்பன் திட்டங்களை செயல்படுத்த ஓஎன்ஜிசி நிறுவனம் முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.