ஓணம் பண்டிகை; சென்னைக்கு உள்ளூர் விடுமுறை!

ஓணம் பண்டிகை; சென்னைக்கு உள்ளூர் விடுமுறை!
Published on
Updated on
2 min read

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் மு அருணா அறிவித்துள்ளார். 

கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் நாளில் கேரளாவில் மட்டுமின்றி, மலையாள மக்கள் வசிக்கும் பல்வேறு மாநிலங்களிலும், நாடுகளிலும் கூட வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. அந்தவகையில் கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, சென்னை ஆகிய பகுதிகளில் கோலாகலமாகக் கொண்டாடப்படும்.

இந்த நிலையில், ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதால்  சென்னை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக செப்டம்பர் 2-ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, திருப்பூா் மாவட்டங்களுக்கும் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு பல்வேறு கல்லூாிகளில் மாணவிகள் பூக்கோலமிட்டு உற்சாக நடனமாடி மகிழ்ந்தனா். அதன் ஒருபகுதியாக திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவிகள் கேரள மாநில பாரம்பாிய உடை அணிந்த வந்து, கல்லூாி வளாகத்தில் பிரமாண்டமாக பூக்கோலமிட்டனா். பின்னா் அனைவரும் உற்சாகமாக கேரள நடனமாடி பண்டிகையை கொண்டாடினா்.

இதேபோல் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள முருகன்புதூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் மகளிா் கல்லூரியில் ஓணம் பண்டிகை நடைபெற்றது. அதனை முன்னிட்டு பேராசிாியா்கள் மற்றும் மாணவிகள் கேரள பாரம்பாிய உடை அணிந்து பூக்கோலமிட்டு அசத்தினா். பின்னா் கல்லூரி மாணவிகள் உற்சாகமாக நடனமாடியும், பாடல்கள் பாடியும் மகிழ்ந்தனா்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com