எந்த விதிமீறலும் இல்லை..... தமிழ்நாடு அரசு விளக்கம்!!!

எந்த விதிமீறலும் இல்லை..... தமிழ்நாடு அரசு விளக்கம்!!!
Published on
Updated on
1 min read

முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு மெரினாவில் நினைவிடம் அமைப்பதில் எந்த விதிமீறலும் இல்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

மனுத்தாக்கல்:

மெரினா கடற்கரையில் அமையவுள்ள பேனா நினைவுச் சின்னத்திற்கு தடைகோரியும், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள நினைவிடங்கள், சமாதிகளின் சுற்றுச்சூழல் விதிமீறல்களை ஆராயக்கோரியும் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ராம்குமார் ஆதித்யன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

பதில் மனு:

இதற்கு  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி ஒளிபரப்பு துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில்,  கடலோர ஒழுங்குமுறை மண்டல இரண்டு விதிகளின் படி கட்டுமான பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விளக்கம்:

கடலோர ஒழுங்குமுறை சட்டத்தின் படி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், தமிழ்நாடு அரசின் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும் அண்ணா நினைவிடத்திற்குள் தான் கலைஞரின் நினைவிடமும் அமைந்துள்ளதால்  அதில் எந்த விதிமீறலும் இல்லை என பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. 

நினைவிடம் அமைக்க பொதுமக்களும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை எனவும்
கடலோர ஒழுங்குமுறை ஆணைய விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பே அண்ணா, எம்.ஜி.ஆர். நினைவிடங்கள் கட்டப்பட்டதாகவும் தமிழ்நாடு அரசின் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com