கிழக்கு கடற்கரை சாலையில் அக்.15-ல் போக்குவரத்துக்கு தடை!!

Published on
Updated on
1 min read

கிழக்கு கடற்கரை சாலையில் வருகிற 15-ம் தேதி அக்கரை முதல் மாமல்லபுரம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், அக்கரை முதல் மாமல்லபுரம் வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சகம் மற்றும் எச்.சி.எல். நிறுவனம் இணைந்து அக்டோபர் 15 ம் தேதி (ஞாயிற்றுகிழமை) சைக்களத்தான் என்ற பெயரில் 55 கி.மீ. தூரத்திற்கான சைக்கிளிங் போட்டியினை நடத்துகிறது. 

தேசிய அளவிலான இந்த சைக்கிளிங் போட்டியில் ஏசியன் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் மற்றும் டெல்லி, பீகார்,  மகாராஷ்டிரா, குஜராத், உ.பி. கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா போன்ற மாநிலங்களை சேர்ந்த சைக்கிளிங் வீரர்கள் 1200 பேர் பங்கேற்கின்றனர். 

சைக்கிளிங் போட்டியில் பங்கேற்பவர்களுக்குறு வெற்றி பெறுபவருக்கு ரூ. 30 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. கானத்தூர் அக்கரை பகுதியில் சைக்கிளிங் போட்டியினை (அக்-15) விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். சைக்கிளிங் போட்டி வீரர்கள் மாமல்லபுரம் வந்து மீண்டும் கானத்தூரில் தங்கள் சைக்கிள் ஓட்டத்தை முடிக்கின்றனர். அங்கு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

இந்நிலையில் தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டி நடப்பதால் கிழக்கு கடற்கரை சாலையில் ரிசார்ட்கள், ஓட்டல்கள், பண்ணை வீடுகள் ஆகியவற்றின் நிர்வாக மேலாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், போக்குவரத்து துறை அதிகாரிகள், போக்குவரத்து காவலர்கள் உள்ளிட்டோரை அழைத்து, செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய்பிரனீத், தாம்பரம் இணை கமிஷனர் குமார் முன்னிலையில்  செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார். 

அப்போது அவர்கள் மத்தியில் கலெக்டர் ராகுல்நாத் பேசியபொழுது, சைக்கிளிங் போட்டி நடத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட, ஓட்டல் நிறுவனத்தினர் தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும்  அன்று காலை 4.30 மணி முதல் காலை 9 மணி வரை போக்குவரத்து நிறத்தப்படுவதால் விருந்தினர்களை அறைகளை காலி செய்து வெளியே அனுப்ப கூடாது என்றும், கிழக்கு கடற்கரை சாலையில் அன்று (ஞாயிறு) சென்னையில் இருந்து வரும் வாகனங்கள் அக்கரை,  சோழிங்கநல்லூர் வழியாக பழைய மாமல்லபுரம் சாலை வழியாக திருப்பி விடப்படும் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com