Aavin VS Amul : ”ஆவின் நிறுவனத்துடன் எந்த நிறுவனமும் போட்டியிட முடியாது" அமைச்சர் திட்டவட்டம்!

Aavin VS Amul : ”ஆவின் நிறுவனத்துடன் எந்த நிறுவனமும் போட்டியிட முடியாது" அமைச்சர் திட்டவட்டம்!
Published on
Updated on
1 min read

'அமுல்' போன்ற எத்தனை  நிறுவனங்கள் வந்தாலும் ஆவின் நிறுவனத்துடன் போட்டியிட இயலாது என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். 

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஈரோடு மாவட்டம் தயிர்பாளையத்தில் நடைபெற்ற கால்நடை மருத்துவ முகாமை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். அப்போது கூட்டுறவு சங்க பால் உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து முதலமைச்சரிடம் பேசி முடிவெடுக்கப்படும் என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், கடந்த மாதங்களை விட தற்போது நாள் ஒன்றுக்கு மூன்று லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் நாளொன்றுக்கு 45 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், ’அமுல்’ போன்ற எத்தனை நிறுவனங்கள் வந்தாலும் ஆவின் நிறுவனத்தோடு போட்டியிட இயலாது என்றும் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com