பீகார் முதலமைச்சரின் திருவாரூர் பயணம் ரத்து...காரணம் இதுதான்!

பீகார் முதலமைச்சரின் திருவாரூர் பயணம் ரத்து...காரணம் இதுதான்!
Published on
Updated on
1 min read

கலைஞர் கோட்ட திறப்பு விழாவிற்காக வருகை தர இருந்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் திருவாரூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

திருவாரூர் அருகே காட்டூரில், சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. திறப்பு விழாவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கும் நிலையில், கலைஞர் கோட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும், முத்துவேலர் நூலகத்தை துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவும் திறந்து வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நிதிஷ் குமாரின் தமிழ்நாடு வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் மட்டும் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், காலையில் கவிஞர் வைரமுத்து தலைமையிலான கவியரங்கத்துடன் கலைஞர் கோட்ட திறப்பு விழா கோலாகலமாக தொடங்கியது. அதில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, எ.வ.வேலு, டிஆர்பி ராஜா மற்றும் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதிகள் விழாவில் பங்கேற்றனர். அதனைதொடர்ந்து மாலை 3 மணி அளவில் திறப்பு விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com