புதிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ள உதகை மலை ரயில்...கொடியசைத்து தொடங்கி வைத்த எல்.முருகன்!

புதிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ள உதகை மலை ரயில்...கொடியசைத்து தொடங்கி வைத்த எல்.முருகன்!
Published on
Updated on
1 min read

புதிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ள உதகை மலை ரயிலை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நேற்று இரவு டெல்லியில் இருந்து விமான மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

இதனையடுத்து, இன்று காலை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் புதிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற உதகை மலை ரயில் வண்டியை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

புகழ்பெற்ற சுற்றுலா தளமாக விளங்கும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு, குன்னூர் வழியாக மேட்டுப்பாளையத்தில் இருந்து இந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வரும் இந்த மலை ரயில் வண்டியை இந்திய ரயில்வே துறையினர் புதிய வடிவில் உருவாக்கி அறிமுகம் செய்துள்ளனர். புதிய வடிவில் உருவாக்கப்பட்டு இன்று துவங்கப்பட்ட ஊட்டி மலை ரயிலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் பயணித்து மகிழ்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பயணச்சீட்டு மையத்தை மத்திய இணை அமைச்சர் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் சட்ட மன்ற உறுப்பினர் ஏ.கே.செல்வராஜ், வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, துணைத்தலைவர் விக்னேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com