அரியலூரில் இருந்து பெரம்பலூர் வழியாக நாமக்கல்லுக்கு ரயில் பாதை அமைப்பது குறித்து இட ஆய்வுப் பணி நடைபெற்று வருவதாக மத்திய ரயில்வே துறை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தருக்கு கடிதம் எழுதியுள்ளது.
அரியலூரில் இருந்து பெரம்பலூர் துறையூர் வழியாக நாமக்கல்லுக்கு புதிய ரயில் பாதை அமைக்க கோரி, பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பாரிவேந்தர் மத்திய ரயில்வே துறைக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தில், "சுதந்திர இந்தியாவில் ரயில் பாதை இல்லாத தொகுதியாக அரியலூர் பெரம்பலூர் பகுதி விளங்குகிறது. எனவே புதிய ரயில் பாதை அமைத்து தருகிற பட்சத்தில் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் அந்த பகுதியின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்" என டாக்டர் பாரிவேந்தர் குறிப்பிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து மத்திய ரயில்வே துறை டாக்டர் பாரிவேந்தருக்கு எழுதிய கடிதத்தில், "அரியலூருக்கும் நாமக்கல்லுக்கும் இடையே பெரம்பலூர், துறையூர், தலையங்கார்பேட்டை வழியாக 116.26 கி.மீ. புதிய ரயில் பாதைக்கான இறுதி கட்ட ஆய்வு கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது" எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஆய்வு பணிகள் முடிந்து அதன் முடிவுகள் உறுதியான பிறகு திட்டம் செயல்படுத்துவது பற்றிய முடிவு சாத்தியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இதையும் படிக்க || நகை பட்டறையில் மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள்... அதிரடி நடவடிக்கை!!