"கஞ்சா விற்பனை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்" தென்மண்டல ஐஜி நரேந்திரன் நாயர்!!

"கஞ்சா விற்பனை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்" தென்மண்டல ஐஜி நரேந்திரன் நாயர்!!
Published on
Updated on
1 min read

கஞ்சா விற்பனை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என தென்மண்டல ஐஜியாக பொறுப்பேற்றுக்கொண்ட நரேந்திரன் நாயர் தெரிவித்துள்ளார்.

மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை உள்ளட்டக்கிய தென் மண்டல காவல்துறை ஐஜி யாக இருந்த அஸ்ராகார்க், சென்னை வடக்கு கூடுதல் ஆணையராக பணி மாறுதல் செய்யப்பட்ட நிலையில் புதிய தென்மண்டல ஐஜியாக  அறிவிக்கப்பட்ட மதுரை மாநகர காவல் ஆணையராக பதவியில் இருந்த நரேந்திரன் நாயர் இன்று மதுரையில் உள்ள தென்மண்டல ஐஜி  அலுவலகத்தில் கையெழுத்திட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். 

அப்பொழுது இது குறித்து அவர் பேசியதாவது, தென் மண்டலத்தில் கஞ்சா விற்பனை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் எனவும், மாநகர காவல் ஆணையர் பொறுப்பேற்கும் வரை மாநகர ஆணையராகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தென்மண்டல ஐஜியாக, பதவியில் இருந்த அஸ்ராகார்க், கஞ்சா விற்பனையை தடுப்பதிலும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகளை முடக்குவதும்  போன்ற பல்வேறு அதிரட நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள மூத்த காவல்துறை அதிகாரியான நரேந்திரன் நாயர் கஞ்சா உள்ளிட்ட போதை தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவரா? என்ற எதிர்ப்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com