நீட் விலக்கு மசோதா- தமிழக அரசின் பதில்களில் ஆயுஷ் அமைச்சகம் கேள்வி? - மா.சு விளக்கம்

நீட் விலக்கு மசோதா- தமிழக அரசின் பதில்களில் ஆயுஷ் அமைச்சகம் கேள்வி? - மா.சு விளக்கம்
Published on
Updated on
1 min read

சென்னை ஓமந்தூரார் அரசு  பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 

பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து பள்ளி சுகாதார மற்றும் ஆரோக்கிய தூதுவத்திட்டத்தை மருத்துவத்துறை செயல்படுத்தி வருகிறோம். மத்திய அரசின் ஆரோக்கிய ஒருங்கிணைப்புக்கான விருதும், மாதவிடாய் குறித்த சிறந்த விழிப்புணர்வுக்கான என 2 விருதுகள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

அனைவருக்கும் மருத்துவ சேவை என்ற வகையில் தமிழ்நாட்டிற்கு விருது கிடைத்திருக்கிறது. உணவு பாதுகாப்புத் துறை சார்பிலும் விருது கிடைக்க பெற்றுள்ளது. பல்வேறு பட்டியில் மருத்துவத்துறையின் கீழ் தமிழ்நாட்டிற்கு விருது கிடைத்துள்ளது.

மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அமைச்சரே இந்தியா முழுமைக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறார். ஒரு கோடி பயனாளிகளை கொண்டு வரலாறு படைத்திருக்கிறது மக்களை தேடி மருத்துவ திட்டம் என்றார். 

25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த திட்டத்திற்கு காடு மேடு மலை கிராமங்கள் என அரசியல்வாதிகள் அதிகாரிகள் செல்லாத கிராமங்களிலும் கூட சென்று மருந்து பெட்டகங்களை வழங்கி உள்ளார்கள் என்றார். 

எடப்பாடி பழனிச்சாமி அரைவேக்கட்டுத்தனமான அறிக்கையை வெளியிடுவது  இது கடுமையாக பணியாற்ற ஊழியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும். முன்னாள் முதலமைச்சர் இவ்வாறு அறிக்கை விடுவது அபத்தமான ஒன்றாக இருக்கிறது. பயனாளிகளின் பட்டியலை எடப்பாடி பழனிச்சாமி எப்போது வேண்டுமானாலும் டிபிஎச் அலுவலகத்தில் வந்து பார்க்கலாம் என்றார். 

அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் போகும்  மருத்துவ இடங்களை மாநில அரசுக்கு ஒதுக்கி தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், புதுக்கோட்டை வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் கவனித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.

நீட் விலக்கு மசோதா குறித்து தமிழக அரசிடம் ஏற்கெனவே உள்துறை அமைச்சகம் மூலம் உயர் கல்வித்துறை, ஆயுஸ் அமைச்சகம் மற்றும் குடும்ப நல்வாழ்வு துறை விளக்கம் கேட்டிருந்தன. அதற்கான பதில்கள் வழங்கப்பட்டன. அந்த பதில்களில் சந்தேகம் இருப்பதால், கடந்த 13ம் தேதி ஆயுஷ் அமைச்சகம் மீண்டும் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது எனவும், அதற்கான பதில்கள் விரைவில் அனுப்பப்படும் என தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com