நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் காளியப்பன் என்பவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினா் 24 மணி நேரத்திற்கு மேலாக சோதனை மேற்கொண்டனா்.
பரமத்திவேலூர் ராஜாஜி தெருவை சேர்ந்தவா் காளியப்பன். இவர் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலையில் டயர் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், அமலாக்க துறையினா் திடீரென அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டனா்.
காளியப்பனை வங்கிக்கு அழைத்து சென்று விசாரணை நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் சக்ரா நகர் ராஜாஜி தெருவில் வசிக்கும் டயர் மணி என்கிற காளியப்பன் (75) என்பவரது வீடு மற்றும் பரமத்திவேலுார் பைபாஸ் சாலையில் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்க துறையை சேர்ந்த 12 அதிகாரிகள் நேற்று மதியம் முதல் சோதனையை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனையில் காளியப்பனின் அவரது மகள்கள், மருமகன்களின் வங்கி கணக்கு, சொத்து மதிப்பு உள்ளிட்டவைகளை விடிய, விடிய தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு செய்து வருகின்றனர்.
காளியப்பன் என்பவர் நேற்று முன் தினம் அமலாக்க துறையினர் சோதனை நடத்திய வேடசந்தூரை சேர்ந்த திமுக பிரமுகர் சாமிநாதனின் உறவினர் ஆவார்.
இன்னிலையில், காளியப்பன் மற்றும் அவரது மகளை பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள வங்கிக்கு அழைத்துச் சென்று லாக்கர்கள் குறித்தும் வங்கி பரிவர்த்தனைகள் குறித்தும் அமலாக்க துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | செந்தில் பாலாஜிக்கு எதிராக கோ-வாரண்டோ வழக்கு; தீர்ப்பு ஒத்திவைப்பு!