மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்கக் கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 11 கிமீ வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து, தற்போது புயலாக மாறியுள்ளது. இப்புயலுக்கு சிட்ராங் என்று பெயரிப்படுள்ளது. போர்ட் பிளேயருக்கு வடமேற்கே சுமார் 730 கிமீ தொலைவிலும், சாகர் தீவிலிருந்து தெற்கே 580 கிமீ தொலைவிலும், பாரிசாலுக்கு (வங்காளதேசம்) தென்மேற்கே 770 கிமீ தொலைவிலும் உள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று நேரத்தில் மத்திய வங்கக்கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, அது மீண்டும் வளைந்து வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து, அக்டோபர் 25 அதிகாலையில் பாரிசலுக்கு அருகில் டின்கோனா தீவு மற்றும் சாண்ட்விப் இடையே வங்காளதேச கடற்கரையை கடக்கும்.என எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது இதன் காரணமாக துறைமுகத்தில் புயல் தூர எச்சரிக்கையை குறிக்கும் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ளது