"காழ்ப்புணர்ச்சி காரணமாகவே கொடநாடு பற்றி ஓபிஎஸ் பேசுகிறார்" கேபி முனுசாமி!!

"காழ்ப்புணர்ச்சி காரணமாகவே கொடநாடு பற்றி ஓபிஎஸ் பேசுகிறார்" கேபி முனுசாமி!!
Published on
Updated on
1 min read

காழ்ப்புணர்ச்சி காரணமாகவே ஓபிஎஸ் தற்போது கொடநாடு விவகாரம் குறித்து பேசி வருவதாக முன்னாள் அமைச்சா் கேபி முனுசாமி குற்றம்சாட்டியுள்ளாா். 

மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாடு தொடர்பான திருச்சி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, உதயகுமார், தங்கமணி வேலுமணி, கே பி முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்பொழுது கே பி முனுசாமி, "ஒ.பன்னீர் செல்வமும், டிடிவி தினகரனும் அரசியலில் அனாதையாகி விட்டார்கள். ஓ பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை தொடங்கிய போது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா மீது தான் குற்றச்சாட்டு வைத்தார். இன்று அதே சசிகலாவுடன் அரசியல் செய்ய நினைக்கிறார். இது அவருடைய கீழ்த்தரமான அரசியல் சிந்தனையை தான் காட்டுகிறது" எனக் குற்றம் சாட்டியுள்ளார்

மேலும், "அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் பறிக்கப்பட்டு விட்ட நிலையில் அந்த காழ்ப்புணர்ச்சியின் காரணமாக கொடநாடு வழக்கை கையில் எடுத்து எதிரிகளுடன் கூட்டணி சேர்ந்து அது குறித்து தற்போது பேசி வருகிறார். ஒ. பன்னீர்செல்வத்திற்கு நேற்று சசிகலாவும் தினகரனும் எதிரியாக இருந்தார்கள். இன்று அவர்கள் அவருக்கு நண்பர்களாகி விட்டார்கள். எடப்பாடி பழனிச்சாமி எதிரியாக மாறி விட்டார். நேரத்திற்கு நேரம் மாறக்கூடியவராக இருக்கிறார்" என்று சாடியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com