டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள மாதிரி பள்ளிகளை போல தமிழ்நாட்டிலும் தொடங்க வேண்டும் என அறிவித்ததன்படி, 171 கோடி ரூபாய் மதிப்பில் 28 தகைசால் பள்ளிகளும், 123 கோடி ரூபாய் மதிப்பில் 15 மாதிரி பள்ளிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோரிக்கை:
சட்டப்பேரவையில் வினாக்கள் – விடைகள் நேரத்தில் பேசிய சேலம் தெற்கு தொகுதி அதிமுக உறுப்பினர் பாலசுப்பிரமணியன், சேலம் மாநகராட்சி மூங்கப்பாடி மகளிர் மேல்நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
முதல்கட்டமாக:
அதற்கு பதிலளித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உறுப்பினர் பேசிய பள்ளியில் 2066 மாணவிகள் பயின்று வருவதாகவும், முதல்கட்டமாக கூடுதலாக 6 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருவதாகவும், நடப்பாண்டிலும் 6 வகுப்பறைகள் கட்டித்தரப்படும் எனவும் பதிலளித்தார்.
மாதிரி பள்ளிகள்:
மேலும் கடந்த ஆண்டு டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள மாதிரி பள்ளிகளை போல தமிழ்நாட்டிலும் தொடங்க வேண்டும் என அறிவித்ததன்படி, 171 கோடி ரூபாய் மதிப்பில் 28 தகைசால் பள்ளிகளும், 123 கோடி ரூபாய் மதிப்பில் 15 மாதிரி பள்ளிகளும் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
அதிக அளவில்:
அந்த 28 தகைசால் பள்ளிகளில் ஒன்றாக சேலம் மாநராட்சி மூங்கப்பாடி பள்ளியும் வருவதால் உறுப்பினரின் கோரிக்கையை விட அதிக அளவில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
இதையும் படிக்க: மதுரையில் ரேபிடோ பைக் டாக்சிக்கு தடை... காரணம் என்ன?!!