தேனி மாவட்டத்தில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நடைபயிற்சி மேற்கொண்டார்.
அமைச்சர் மா. சுப்பிரமணியன் மேற்கொண்ட இந்த நடைப்பயிற்சி, தேனி அரண்மனைப் புதூர் பகுதியில் துவங்கி, கொடுவிலார்பட்டி, அய்யனார்புரம், கோட்டைப் பட்டி வழியாக மீண்டும் அரண்மனைப் புதூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக நிறைவுற்றது.
8 கி.மீ தூரமுள்ள இந்த நடைபயிற்சியில் அமைச்சர் மா.சுப்ரமணியனுடன், ஆட்சியர் ஷஜீவனா, எஸ்.பி.பிரவீன் உமேஷ் டோங்ரே உள்பட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள், ஊர் பொதுமக்கள், தன்னார்வலர்கள், மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நடை பயிற்சியின் முடிவில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் சிலம்பம் சுற்றி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதையும் படிக்க || "இந்தியாவின் கிழக்கு கொள்கைக்கு ஏசியான் ஒரு தூணாக உள்ளது" பிரதமர் மோடி!!