பாறையில் சிக்கி நகர்த்த முடியாமல் நின்ற அமைச்சரின் கார். அலுவலர்களும் பத்திரிக்கையாளர்களும் பத்திரமாக மீட்டனர்.
தமிழ்நாடு வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி அத்திக்கடவு அவிநாசி திட்டப் பணிகள் நடைபெற்று வரும் பல்வேறு இடங்களில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதற்கென அவரது அரசு வாகனத்தில் சென்ற அமைச்சர் முத்துசாமி ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் கந்தம்பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை பார்வையிட்டு திரும்பினார். அப்போது அமைச்சர் சென்ற கார் திடீரென கல் ஒன்றில் சிக்கி நகர முடியாமல் நின்றது. இதையடுத்து சுற்றி இருந்த அரசியல்வாதிகளும் அரசு அலுவலர்களும் பத்திரிகையாளர்களும் வாகனத்தை அங்கிருந்து நகர்த்த முயற்சித்தனர்.
அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்த நிலையில் சமயோகிதமாக சிந்தித்த அமைச்சர் வாகனத்தை மீட்க முயற்சித்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அமைச்சரின் ஆலோசனையின்படி செயல்பட்டதும் வாகனம் சற்று நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பியது. தனியாருக்கு சொந்தமான இடத்தில் திடீரென அமைச்சரின் கார் நகர முடியாமல் நின்றதால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
-நப்பசலையார்
இதையும் படிக்க: தத்தெடுத்தால் ஓய்வூதியம் இல்லையா....சட்டம் கூறுவதென்ன?!!