முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தனது கணவர் மாதவனுடன் சென்னை பசுமைவழிசலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு வந்தார்.
ஓபிஎஸ் உடன் சந்திப்பு:
சுமார் 20 நிமிட சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஜெ.தீபா, தனக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அரசியல் தாண்டி பரிச்சயம் உள்ளதாகவும், வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள அவரது மகளுக்கு பெயர் சுட்டும் விழாவில் கலந்துக்கொள்ள நேரில் அழைப்பு விடுக்க வந்ததாக கூறியுள்ளார்.
விருப்பமில்லை:
அதிமுகவில் நடக்கும் பிரச்சனை மேலோட்டமாக தான் தெரியும் எனவும் அரசியலுக்கு அப்பாற்பட்டவளாக கருத்து சொல்ல விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மாற்றமில்லை:
சசிகலா மீது சொன்ன எந்த குற்றச்சாடுகளிலும் மாற்றமில்லை எனவும் அவை அனைத்தும் ஆராய்ந்து பார்க்க வேண்டிய விஷயங்கள் எனவும் கூறியுள்ளார்.
புனரமைக்கும் பணிகள்:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்தில் எப்போது குடியேறுவீர்கள் என்ற கேள்விக்கு, வீடு பாழடைந்துள்ளதாகவும், புனரமைக்கும் வேலைகள் முடிந்தவுடன் குடியேறுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
கடவுள் கையில்:
எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என கேட்டதற்கு, Man proposes god disposes என்பது போல நாம் முடிவு எடுப்பது போல் நடப்பதில்லை எனவும் அரசியலுக்கு வருவது கடவுள் கையில் உள்ளது எனவும் கூறியுள்ளார்.
-நப்பசலையார்