ரூ.37 கோடி மதிப்பீட்டில் கடல்சார் பாலம்... பொதுப்பணித்துறை அமைச்சர் அறிவிப்பு...

திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை இடையே ரூ.37 கோடி மதிப்பீட்டில் கடல்சார் பாலம் - அமைச்சர் எ.வ.வேலு
ரூ.37 கோடி மதிப்பீட்டில் கடல்சார் பாலம்... பொதுப்பணித்துறை அமைச்சர் அறிவிப்பு...
Published on
Updated on
1 min read

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் பாறைக்கும் இடையே 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடல்சார் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

நேற்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட மொத்தம் 70 ஆயிரத்து 566 கிலோமீட்டர் சாலைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் பாறைக்கும் இடையே 140 மீட்டருக்கு கடலின் மேல் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், இதுகுறித்து ஐஐடி-யுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, பாம்பன் பாலம் கட்டியது போல், நல்ல தரத்துடன் 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கடல்சார் பாலம் அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com